முள்ளியாற்றில் படித்துறை கட்டித்தரப்படுமா
கோட்டூர் அருகே முள்ளியாற்றில் படித்துறை கட்டித்தரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கோட்டூர்;
கோட்டூர் அருகே முள்ளியாற்றில் படித்துறை கட்டித்தரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
படித்துறை
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே தாளந்திருவாசல் கிராமத்தில் 65 குடும்பங்களும் கீழப்பனையூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் உள்ளன. இந்த இரு கிராமங்களுக்கும் இடையே முள்ளியாறு செல்கிறது. முள்ளியாற்றில் தாளந்திருவாசல், கீழப்பனையூர் ஆகிய கிராம மக்கள் பயன்படும் வகையில் படித்துறை அமைத்து மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த 2 இரண்டு கிராமங்களுக்கும் இடையே இணைப்பு பாலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால் இரு கிராம மக்களும் பயன்படுத்தி வந்த படித்துறை அகற்றப்பட்டது.
ஆகாயத்தாமரை
இதனால் முள்ளி ஆற்றில் படித்துறை இல்லாமல் தாளந்திருவாசல் மற்றும் கீழப்பனையூர் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த பகுதி மக்கள் பயன்படுத்த வேறு குளங்கள் இல்லை.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு முள்ளியாற்றில் வடகரை மற்றும் தென்கரையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் படித்துறை கட்ட வேண்டும். மேலும் பாலத்தில் ஆகாயத்தாமரை மற்றும் செடி கொடிகள் அடைத்துக் கொண்டு தண்ணீர் செல்லாமல் தேங்கி வருகிறது.மேலும் முள்ளியாற்றின் இரு கரைகளும் பலகினமாக உள்ளது. இதனால் கூடுதலாக மழை பெய்தால் அல்லது தண்ணீர் அதிக அளவில் வந்தால் கரை உடைய வாய்ப்பு உள்ளது.எனவே முள்ளியாற்றில் படித்துறை கட்டி ஆகாயத்தாமரை மற்றும் செடி கொடிகளை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.