தொகுதி பங்கீடு - மதிமுகவுக்கு திமுக தேர்தல் பேச்சுவார்த்தை குழு அழைப்பு
நாளை காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுக, தனது கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்று தொகுதிப் பங்கீடு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு மதிமுகவுக்கு திமுக தேர்தல் பேச்சுவார்த்தை குழு அழைப்பு விடுத்துள்ளது. நாளை காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.