வன உயிரின பாதுகாப்பு

வன உயிரின பாதுகாப்பு

Update: 2022-10-12 12:36 GMT

உடுமலை,

உடுமலை பழனி சாலையில் உள்ள ஆர்.ஜி.எம். மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்ட உதவி வன பாதுகாவலர் செல்வம் கலந்து கொண்டு காடுகள் பற்றிய புரிதலையும், வனங்களையும் வன உயிரினங்களையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் கருத்து விளக்கத்தை படங்களுடன் மாணவர்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் சில அபூர்வமான, புதுமையான பறவைகள் மற்றும் விலங்குகளையும் படத்தொகுப்பு மூலம் விளக்கினார். அதில் இருவாச்சி பறவை, புனுகுப்பூனை, சிங்கவால் குரங்கு, சருகுமான், நீர்நாய், வரையாடு பற்றிய அரிய தகவல்களை தெரிவித்தார். ஆனைமலை வட்டத்தில் உள்ள டாப்சிலிப்பில் வசிக்கும் மலசர் இன பழங்குடியினர் வாழ்க்கை முறையினையும், 26 வளர்ப்பு யானைகள் (கும்கி) பற்றியும் விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களிடம் அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகளை பற்றிய கேள்விகள் புதிர்களாக கேட்கப்பட்டது. அதற்கான பதில்களை மாணவர்கள் தெரிவித்தனர். இதில் சிறந்த விளக்கம் அளித்ததாக ஜோலின்னஸ், முகமதுயாசின், வருண் ஆகிய 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களைஉதவி வன பாதுகாவலர் செல்வம், பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி ஆகியோர் பாராட்டி சிறப்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்