தூய பரலோக அன்னை ஆலய அர்ச்சிப்பு விழா

சாத்தான்குளம் அருகே தூய பரலோக அன்னை ஆலய அர்ச்சிப்பு விழா நடந்தது.

Update: 2022-10-01 18:45 GMT

சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிவிளையில் தூய பரலோக அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் 10 நாட்கள் திருவிழா வருடம்தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா நாட்களில் தினமும் காலை நவநாள் திருப்பலியும் மாலை ஜெபமாலை, பிராத்தனை, நற்கருணை ஆசீரும் நடந்தது. 8-ம் திருவிழாவான நேற்று காலை 5.30 மணிக்கு நவநாள் திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, பிரார்த்தனையும் நடந்தது. தொடர்ந்து புதிதாக புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தை புனிதப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மறை மாவட்ட முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ், மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம், மறை மாவட்ட பொருளாளர் பேராயர் சகாயம், சாத்தான்குளம் மறை வட்ட ரவிபாலன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலயத்தினை திறந்து வைத்தனர். முன்னதாக நடந்த நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்