பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஆற்றில் கரைப்பு
பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஆற்றில் கரைப்பு
திருப்பூர்
நவராத்திரியை முன்னிட்டு திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் 108 துர்கா பூஜா சேவா சமிதி சார்பில் வடமாநிலத்தவர்கள் இணைந்து நவராத்திரி துர்கா பூஜை வழிபாடு செய்தனர். நவராத்திரி துர்கா பூஜையில் துர்கா தேவி, லெட்சுமி, சரஸ்வதி, விநாயகர், சிவன், பிரம்மா, விஷ்ணு, முருகன் உள்ளிட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 10 நாட்கள் தொடர்ச்சியாக காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடும் அதைத்தொடர்ந்து இரவு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நவராத்திரி துர்கா பூஜை முடிவடைந்த நிலையில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஈரோடு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது. இதில் வடமாநிலத்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.