மானாமதுரை அருகே மேலநெட்டூரில் சாந்தநாயகி-சொர்ணவாரீசுவரர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
மானாமதுரை அருகே மேலநெட்டூர் சாந்தநாயகி- சொர்ணவாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை
மானாமதுரை அருகே மேலநெட்டூர் சாந்தநாயகி- சொர்ணவாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சொர்ணவாரீஸ்வரர் கோவில்
மானாமதுரை அருகே உள்ள மேலநெட்டூர் கிராமத்தில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட சாந்தநாயகி அம்பாள் சமேத சொர்ணவாரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதும் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கடந்த 23-ந்தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது. மேலும் யாகசாலையில் மூலவர் சுவாமி-அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தனித்தனியாக யாக குண்டங்கள் வளர்க்கப்பட்டு புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர், விமான கலசங்கள் மற்றும் பரிவார விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க செல்லப்பா குருக்கள் தலைமையில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திரண்டிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகிநாச்சியார் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, மானாமதுரை சரக தேவஸ்தான கண்காணிப்பாளர் (பொறுப்பு) சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாராஜ்குமார், துனணத்தலைவர் சிவகாமி ராசுபிள்ளை, கிராம நிர்வாகிகள் கருப்பையா, ரமேஷ்சுவாமிகள், முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.
கும்பாபிஷேகம் முடிந்தவுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. சிவகங்கை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் மற்றும் மானாமதுரை துணை சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பூபதிராஜா உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.