தென்மாவட்ட ரெயில்களில் 12-ந் தேதி வரை கூடுதல் பெட்டிகள் இணைப்பு

மதுரை வழியாக தென்மாவட்ட ரெயில்களில் 12-ந் தேதி வரை கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-09-02 19:40 GMT

தென்னக ரெயில்வேயில் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

அதன்படி, மதுரை வழியாக இயக்கப்படும் சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரசில் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 11-ந் தேதி வரையிலும், குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரசில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 12-ந் தேதி வரை ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது. மதுரை வழியாக இயக்கப்படும் தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரசில் வருகிற 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையிலும், நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரசில் வருகிற 7-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலும் ஒரு பொதுப்பெட்டியும், நாகர்கோவில்-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரசில் வருகிற 10-ந் தேதி, சென்னை சென்டிரல்-நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரசில் வருகிற 9-ந் தேதி ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. கோவை-நாகர்கோவில் நள்ளிரவு எக்ஸ்பிரசில் இன்று முதல் வருகிற 10-ந் தேதி, நாகர்கோவில்-கோவை நள்ளிரவு எக்ஸ்பிரசில் நாளை முதல் வருகிற 11-ந் தேதி வரை ஒரு 2-ம் வகுப்பு தூங்கும்வசதி பெட்டியும், தாம்பரம்-நாகர்கோவில் வாரம் மும்முறை எக்ஸ்பிரசில் வருகிற 7,10,11-ந் தேதிகளிலும், நாகர்கோவில்-தாம்பரம் வாரம் மும்முறை எக்ஸ்பிரசில் வருகிற 8,11,12-ந் தேதிகளில் ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. அதேபோல, நாகர்கோவில்-கச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரசில் வருகிற 10-ந் தேதியும், கச்சிகுடா-நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரசில் வருகிற 11-ந் தேதியும் ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்