காங்கிரசின் வெற்றி உறுதி

ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரசின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என திருவாரூரில், கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2023-02-19 18:45 GMT

கொரடாச்சேரி:

ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரசின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என திருவாரூரில், கே.எஸ்.அழகிரி கூறினார்.

பேட்டி

திருவாரூரில் காங்கிரஸ் ஒற்றுமை பயண வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் துரைவேலன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல்காந்தி நடத்திய இந்திய ஒற்றுமைப் பயணம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

வெற்றி உறுதி

கிராமப்புற திட்டங்களுக்கு நிதியை குறைக்கும் மத்திய அரசு, அதானிக்கு சலுகை காட்டுகிறது. ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது, 18 மாத கால தி.மு.க. ஆட்சிக்கு சான்றாக மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டு ஈரோட்டில் எடுபடவில்லை. பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக சீமான் பேசுவதை கைவிட வேண்டும்.

தமிழர்களும் பிற மாநிலங்களில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆன்லைன் தடை சட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும். நிதி நிலைமையை சரி செய்து படிப்படியாக ஆசிரியர், அரசு ஊழியர் உள்ளிட்ட அனைவரது பிரச்சினையையும் தி.மு.க. அரசு தீர்த்து வைக்கும். இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறினார்.

கூட்டணி கட்சிகள் முடிவு செய்யும்

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்த்துக் கொள்ளப்படுமா? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த கே.எஸ். அழகிரி, கூட்டணி கட்சிகள் இணைந்து முடிவு செய்யப்படும் என்றாா்.முன்னதாக திருவாரூர் ெரயில் நிலையத்தில் இருந்து கே.எஸ்.அழகிரி, குதிரை வண்டியில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்