ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்: திருமாவளவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-20 08:15 GMT

தூத்துக்குடி, 

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் நடைபெற்ற குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இது போன்ற தவறுகளை தடுக்க கியூ பிரிவு போல் தனி உளவுப்பிரிவு அமைக்க வேண்டும் என்பதை அரசுக்கு கோரிக்கையாக வைக்கின்றேன். இரட்டை குவளை முறை அதிகமாக உள்ளது. எனவே அதனை ஒழிக்க சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். அதற்கு கூட்டணி கட்சிகள் வலுவாக பாடுபடுவோம். நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறுவது இயலாது. ஏனெனில் அந்த கட்சி சின்னத்தினை இழந்து நிற்பதோடு, மட்டுமல்லாமல் அந்த கட்சி 2 பிரிவுகளாக உள்ளது. எனவே வெற்றி பெறுவது கடினம்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்