ராகுல் காந்தி எம்.பி.யின் இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஒரு ஆண்டு நிறைவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட, நகர் காங்கிரஸ் சார்பில் ராமநாதபுரத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமையில் நடைபயணம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் சிகில்ராஜ வீதியில் தொடங்கிய இந்த நடைபயணத்தில் மாநில செயலாளர்கள் ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் துல்கீப்கான், ஜோதிபாலன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி, மாவட்ட துணைத் தலைவர் காவனூர் கருப்பையா உள்பட கலந்து கொண்டனர். இந்த நடைபயணம் கேணிக்கரை வழியாக அண்ணாசிலை, வண்டிக்காரத்தெரு வழியாக நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து நிறைவுபெற்றது. நகர் காங்கிரஸ் தலைவர் கோபி நன்றி கூறினார்.