காங்கிரசார் தெருமுனை பிரசாரம்; ஜோதிமணி எம்.பி. பங்கேற்பு

வேடசந்தூர் அருகே காங்கிரசார் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில், ஜோதிமணி எம்.பி. கலந்துகொண்டார்.

Update: 2023-03-31 20:45 GMT

வேடசந்தூர் அருகே கோட்டூர், அய்யர்மடம் மற்றும் அய்யலூர் பேரூராட்சிக்குட்பட்ட மலைக்கிராமங்களான கோம்பை, பஞ்சந்தாங்கி, காக்கையனூர் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில், கரூர் எம்.பி. ஜோதிமணி கலந்துகொண்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடினார். அப்போது, ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறித்தும், அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது குறித்தும் எடுத்துக்கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், வட்டார தலைவர் சதீஷ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்புராயன், பெரியசாமி, வட்டார பொதுச்செயலாளர் கண்ணன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் பாண்டியன், மூர்த்தி, பகவான், ஜாபர்அலி, பெரியசாமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்