காங்கிரசார் தெருமுனை பிரசாரம்
ஏரலில் காங்கிரசார் தெருமுனை பிரசாரம் செய்தனர்.
ஏரல்:
பா.ஜ.க. மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட தலைவருமான ஊர்வசி அமிர்தராஜ் ஆலோசனைப்படி ஏரலில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது. கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் தாசன், நல்லகண்ணு, புங்கன், பார்த்தசாரதி, கோதண்டராமன், சக்திவேல், முருகன், பாலசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீவைகுண்டம் யூனியன் கவுன்சிலர் பாரத் வரவேற்றார்.
கூட்டத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன், மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் அன்பு ராணி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சிவகளை பிச்சையா, தோழப்பன்பண்ணை சீனி ராஜேந்திரன், பிச்சிவிளை சுதாகர், உடன்குடி ராஜன், முன்னாள் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயராஜ், ஏரல் நகர தலைவர் பாக்கர் அலி, ஸ்ரீவைகுண்டம் கருப்பசாமி, ஆறுமுகநேரி ராஜாமணி, ஸ்ரீவைகுண்டம் முன்னாள் நகர தலைவர் சித்திரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.