காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்
காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் நடத்தினர்.
ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி, மெயின்கார்டுகேட்டில் உள்ள காந்தி சிலை அருகே நேற்று சத்தியாகிரக போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின்பிரசாத், மாவட்ட பொருளாளர் ராஜாநசீர், கவுன்சிலர் ரெக்ஸ் உள்பட காங்கிரசார் திரளாக கலந்து கொண்டனர். பிரதமர் மோடிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் போராட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.