நத்தம் உள்பட 4 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நத்தம் உள்பட 4 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் நத்தம் பஸ் நிலைய ரவுண்டானா அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர தலைவர் முகமது அலி தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் பழனியப்பன், பில்லான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகி் காமராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வத்தலக்குண்டுவில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரசூல் மைதீன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் கனிராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், நடராஜன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆத்தூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக செம்பட்டி நால்ரோட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
இதேபோல் வடமதுரையில் மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது/ இதில், வட்டார தலைவர் ராஜரத்தினம், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் கவுதம் ஜெயசாரதி, மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.