காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்

சாயல்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-21 18:03 GMT

சாயல்குடி, 

மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாயல்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் வேலுச்சாமி, சாயல்குடி காங்கிரஸ் நகர தலைவர் காமராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயராஜ், சிக்கல் ஊராட்சி துணைத்தலைவர் அமீன், நரிப்பையூர் வட்டார தலைவர் ஞானசேகரன், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் போஸ், மாவட்ட செயலாளர்கள் ஹமீது, முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கணேசன், கடலாடி காங்கிரஸ் மேற்கு வட்டார தலைவர் அப்துல் சத்தார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்னேஸ்வரன், இளைஞர் காங்கிரஸ் வட்டார துணைத்தலைவர் இருதயராஜ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்வதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சாயல்குடி நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜா, பூப்பாண்டியபுரம் வார்டு தலைவர் அந்தோணிராஜ், நிர்வாகிகள் அமிர்தராஜ், மைக்கேல் ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர

Tags:    

மேலும் செய்திகள்