காங்கிரசார் அமைதி ஊர்வலம்
பெண்கள் மீதான வன்கொடுமையை கண்டித்து காங்கிரசார் அமைதி ஊர்வலம் நடத்தினர்.
மதுரை,
பெண்கள் மீதான வன்கொடுமையை கண்டித்தும் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் மதுரை மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பு இருந்து தொடங்கியது. ஊர்வலத்திற்கு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஷானவாஸ் பேகம் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை சிறப்பு விருந்தினரான மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து பங்கேற்றார். ஊர்வலம் காந்தி மியூசியத்தில் நிறைவடைந்தது.
அங்கு காந்தியின் சிறப்புகள் குறித்தும், பெண்களின் வன்கொடுமைக்கு எதிராகவும் நிர்வாகிகள் பேசினர். இதில் மகிளா காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் மரிய வினோலா, மாவட்ட பொதுச்செயலாளர்கள் நளினி, சித்ரா, ஹேமா, உஷா, கவுன்சிலர்கள் தல்லாகுளம் முருகன், ஜெய்ஹிந்த்புரம் முருகன், எஸ்.எஸ்.போஸ், ராஜபிரதாபன், மாநில பொதுச்செயலாளர் சையது பாபு மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.