ஒண்டிவீரன் சிலைக்கு காங்கிரசார் மரியாதை
பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாளையங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், முரளிராஜா, வக்கீல் அணி இணைத்தலைவர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.