காமராஜர் உருவப்படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
ராமேசுவரத்தில் காமராஜர் உருவப்படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ராமேசுவரம்,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்த நிலையில் ராமேசுவரத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் பஸ் நிலையம் எதிரே காமராஜரின் உருவப்படம் வைக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். நகர் தலைவர் ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மீனவர் அணி மாவட்ட தலைவர் சகாயராஜ் மற்றும் நிர்வாகிகள் பாபா செந்தில், நிக்கோலஸ், பிரேம்குமார், ஜபார், ராக்கு, மகாலிங்கம், ராஜு, முத்து, காமராஜ், தவமணி, துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்கள் பலருக்கு இனிப்பு வழங்கினார்கள்.