காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரசாரம்
ஏரலில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரசாரம் மேற்கொண்டனர்.
ஏரல்:
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து ஏரல் பஸ் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர். வட்டார தலைவா் தாசன் தலைமை தாங்கினார். நகர தலைவா் பாக்கா்அலி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் யூனியன் கவுன்சிலா் பாரத், வட்டார பொருளாளா் அய்யம்பெருமாள், ஓ.பி.சி. நகர தலைவா் பிஸ்மிசுல்தான் உள்பட பலா் கலந்து கொண்டனா்.