காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம்

ஆரணி தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.

Update: 2023-04-20 10:44 GMT

ஆரணி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பதவியை தகுதி இழப்பு செய்து உடனடியாக அரசு குடியிருப்பில் இருந்து காலி செய்ய உத்தரவு பிறப்பித்த மத்திய அரசை கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆரணி தச்சூர் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் தவணி வி.பி.அண்ணாமலை தலைமை தாங்கினார். ஆரணி நகர கமிட்டி தலைவர் ஜெ.பொன்னையன் வரவேற்றார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. டி.பி.ஜெ.ராஜாபாபு, மாவட்ட துணை தலைவர்கள் அன்பழகன், தசரதன், சக்கரவர்த்தி, சைதை சம்பந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினர் கன்னிகா, முன்னாள் நகரசபை உறுப்பினர் எஸ்.டி.செல்வம்,

நகர, வட்டார தலைவர்கள் மாரி, சிவாஜி, பழனி, பாஷா ஜாபர் அலி, குமரன், பாலையா, மணி, சுகன்யா, விஜயகாந்த், முரளி, முருகன், துளசிதரன், உமாசங்கர், ஏழுமலை, விஸ்வநாதன், நகரசபை உறுப்பினர்கள் மருதேவி பொன்னையன், மணி, கோகுல்ராஜ், பூங்காவனம் மற்றும் கே.டெல்லிமோகன், உதயகுமார், பிள்ளையார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்