காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.
பரமக்குடி,
குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து பரமக்குடி பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பரமக்குடி நகர் தலைவர் அகமது கபீர் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கோட்டை முத்து, மாநில செயலாளர் ஆனந்தகுமார், செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் பொதுகுழு உறுப்பினர்கள் ரெங்கநாதன், ஜோதி பாலன், ராஜீவ் காந்தி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் நாராயணன், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகள் சங்க செயலாளர் ஹாரிஸ், மாவட்ட மகளிர் அணி தலைவி ராமலட்சுமி, மற்றும் நிர்வாகிகள் மில்கா செந்தில், பசும்பொன் அப்தாகிர், ஜெபமாலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.