காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
ஆரணியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொது செயலாளரும், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ராகுல்காந்திக்கு குஜராத் கோர்ட்டில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ராகுல்காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதனை கண்டித்து இன்று ஆரணி நகரில் காந்தி சிலை அருகே நகர தலைவர் ஜெ.பொன்னையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடந்தது.
இதில் முன்னாள் நகரசபை உறுப்பினர் எஸ்.டி.செல்வம், முன்னாள் மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டி.பி.ஜெ.ராஜாபாபு, சைதை சம்பந்தம், உதயகுமார், பிள்ளையார், தாவூத்ஷரிப், பிரபு, மாணிக்கம், குப்புசாமி, சைதை பாபு, ஆறுமுகம், குமரேசன், சிவசங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன் மற்றும் போலீசார் சமாதானம் செய்தனர்.
இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.