காங்கிரஸ் கட்சியினர் சாலைமறியல்-ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் சாலைமறியல்-ஆர்ப்பாட்டம்
குஜராத் கோர்ட்டில் நடந்த ராகுல்காந்தியின் வழக்கினை தள்ளுபடி செய்ததை கண்டித்து தலைஞாயிறு கடைத்தெருவில் தலைஞாயிறு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத் தலைவர் வேணுகோபால், முன்னாள் வட்டாரத்தலைவர் கனகராஜ், நகரச்செயலாளர் ஹரி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். அதேபோல் வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வட்டார தலைவர் சங்கமம் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் சக்கரபாணி, பொதுச்செயலாளர் ராஜாஜி, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் சத்யகலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் கைது செய்தனர். வேதாரண்யம் வடக்கு வீதியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட வர்த்தக அணி அப்துல் ஹுசைன், முன்னாள் நகரத்தலைவர் வைரம் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.