தென்காசியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக தென்காசி வணிகவரி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் செல்வராஜ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், மாநில பேச்சாளர் எஸ்.ஆர். பால்துரை, நகர காங்கிரஸ் தலைவர் காதர் முகைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.