ராகுல்காந்தி மீதான வழக்குகளை திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்தி மீதான வழக்குகளை திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-08 19:24 GMT

ராகுல்காந்திக்கு வழங்கப்பட்டுள்ள 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்தும், வழக்குகளை திரும்ப பெறக்கோரியும் திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு துவாக்குடி நகர காங்கிரஸ் கட்சி தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.

திருவெறும்பூர் வட்டார தலைவர்கள் செந்தில்குமார், ரகுவரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும், கவுன்சிலருமான கோவிந்தராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, வட்டார, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்