காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராகுல்காந்தி பதவியை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணராயபுரம் ரெயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணராயபுரம் வட்டார தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட முன்னாள் தலைவர் பேங்க் சுப்பிரமணி தொடங்கி வைத்து, கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் மாவட்ட துணை தலைவர் சின்னையன், மாநில ஓ.பி.சி. பொதுச்செயலாளர் தட்சிணாமூர்த்தி, பொய்கைபுத்தூர் கிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.