காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து, நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு நேற்று காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.