காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தகவல் உரிமை அணியின் சார்பில் திலகர் திடல் அருகே நேற்று நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பா.ஜ.க. அரசின் தவறான கொள்கை மற்றும் அத்தியாவசிய பொருட்கள், அவசர சிகிச்சை, பால், தயிர், பேனா, பென்சில் எழுதுபொருட்கள் ஆகியவற்றிற்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் நிதி மந்திரி மற்றும் பிரதமரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது எழுது பொருட்களை குறிக்கும் வகையில் பென்சில் மற்றும் கணித வகுப்பிற்கு பயன்படுத்தக்கூடிய டப்பா போன்ற மாதிரியை பெரிதாக எடுத்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தகவல் உரிமை அணி தலைவர் மதன்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.