காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சுரண்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுரண்டை:
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சுரண்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் சமூக ஊடகங்களில் ராகுல்காந்தி எம்.பி.யின் படத்தை வெளியிட்டு புதிய யுகத்தின் ராவணன் என்று கேலிச்சித்திரம் வெளியிட்டு இருந்ததை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால் தலைமை தாங்கினார். சுரண்டை நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன், சட்டநாதன், ஜேம்ஸ் சங்கர்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனிநாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
இதில் எஸ்.ஆர்.பால்துரை, தென்காசி மாவட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.