தேனி எம்.பி. ரவீந்திரநாத் அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை - பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷம்
ரவீந்திரநாத் எம்.பி.யின் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
தேனி,
சமையல் எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவில்லை எனக்கூறி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ரவீந்திரநாத் எம்.பி.யின் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
முன்னதாக விலைவாசி உயர்வு மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் கேஸ் சிலிண்டர்களை தூக்கிக் கொண்டு பேரணி நடத்தினர்.
இதையடுத்து ரவீந்திரநாத் எம்.பி.யின் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக தேனி-திண்டுக்கல் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.