காங்கிரஸ் கட்சியினர் இனிப்புவழங்கி கொண்டாட்டம்
ஏரல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ஏரல்:
ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் ஏரலில் காங்கிரஸ் நிர்வாகிகள் காந்தி சிலை அருகில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு ஏரல் நகர தலைவர் பாக்கர் அலி தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோன்று சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும்கொண்டாடினர்.