காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா

சுத்தமல்லியில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது.

Update: 2022-12-28 22:01 GMT

பேட்டை:

நெல்லையை அடுத்த சுத்தமல்லியில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை வெற்றி நடைபயண கொடியேற்று விழா, சுத்தமல்லி மற்றும் ெரயில் நகர் பஸ் நிறுத்தம் அருகில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் பரணி இசக்கி, உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு, கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இதில் மாவட்ட துணை தலைவர் சிவன் பெருமாள், மண்டல தலைவர் அய்யப்பன், வட்டார தலைவர் பாக்கிய குமார், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்