தக்கலையில் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
தக்கலையில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தர்ணாவில் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
தக்கலை:
ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தக்கலை பழைய பஸ் நிலையத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங் தலைமை தாங்கினார். நகர தலைவர் ஹனுகுமார், வட்டாரத் தலைவர் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராேஜஷ் குமார், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் உள்பட பலர் போராட்டத்தை விளக்கி பேசினர். போராட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கண்டன முழக்க மிட்டனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் ஜாண் இக்னேசியஸ், ஜோண்ஸ் இம்மானுவேல், தக்கலை ஊராட்சி ஒன்றிய தலைவர் அருள் ஆன்டனி, குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோபர் மற்றும் மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.