காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினார்கள்.
தட்டார்மடம்:
கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினார்கள்.
காங்கிரஸ் வெற்றி
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மேலும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பொறுப்பாளராக இருந்த தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதை வரவேற்றும், அவர் அறிவுறுத்தலின்பேரில் சாத்தான்குளம் வட்டார, நகர காங்கிரஸ் சார்பில் பழைய பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.
மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் லூர்துமணி, பார்த்தசாரதி, சக்திவேல்முருகன், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஒன்றிய கவுன்சிலர் பிச்சிவிளை சுதாகர், வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி பாலா, நகர மகிளா காங்கிரஸ் தலைவி புளோரா ராணி, முன்னாள் மாவட்ட தலைவி ஜாக்குலின், வட்டார துணைத் தலைவர் நல்லத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் முதலூரில் வட்டார தலைவர் லூர்துமணி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. முதலூர் பொறுப்பாளர் ஜெயபதி, முதலூர் ஊராட்சி தலைவர் பொன்முருகேசன், சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி
ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பழனிவேல், வட்டார செயலாளர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் துணைத் தலைவர் சிவகணேசன் மூக்கன் கிறிஸ்டியான், மாவட்ட கலை-இலக்கிய அணியின் தலைவர் மா.ராமச்சந்திரன், நகர செயலாளர்கள் சாலமோன் ஜெபராஜ், பிலிப் எல்சன், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆல்வின் சேவியர் சுபாஷ் சந்திர போஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார காங்கிரஸ் தலைவர் சற்குரு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
முத்தையாபுரம்-கோவில்பட்டி
தூத்துக்குடி மாநகரம் தெற்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி சாா்பில் முத்தையாபுரம் தோப்பு பஸ் நிறுத்தம் அருகில் முன்னாள் தெற்கு மண்டல காங்கிரஸ் தலைவர் முடிசூடி தலைமையில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில ஐ.என்.டி.யூ.சி துணைத்தலைவர் அன்னைஇந்திரா சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு முன்னாள் மாவட்ட தலைவர் காமராஜ் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இதில் மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.