இந்திய கம்யூனிஸ்டு கட்சி பேரவை கூட்டம்

ஆயக்காரன்புலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பேரவை கூட்டம் நடந்தது.

Update: 2022-12-20 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலத்தில் வேதாரண்யம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கட்சி உறுப்பினர் அட்டை வழங்கும் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் பாலகுரு தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் பெரியசாமி, மாவட்டச் செயலாளர் சிவகுரு பாண்டியன் ஆகியோர் ஒவ்வொரு கிளைச் செயலாளருக்கும் உறுப்பினர் அட்டைகளை வழங்கினர். இதில் மாவட்டத் துணைச் செயலாளர் நாராயணன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், மகளிர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்