காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு, பட்டாசு வழங்கி கொண்டாடினார்கள்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு, பட்டாசு வழங்கி கொண்டாடினார்கள்.
காங்கிரஸ் வெற்றி
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையோடு வெற்றி பெற்றதை தொடர்ந்து தூத்துக்குடி தபசுமண்டபம் அருகில் நேற்று மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் சந்திரபோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக புதுக்கோட்டை மெயின் பஜாரின் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
மாநில காங்கிரஸ் பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் முள்ளக்காடு சாமுவேல் ஞானதுரை தலைமை தாங்கினார். புதுக்கோட்டை ராஜா, டேனியல், கோபால், பெரியதுரை, கா.சாயர்புரம் வேல், நந்தகோபாலபுரம் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஏரல்
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆலோசனைப்படி காங்கிரஸ் கட்சியினர் ஏரலில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் ஏரல் நகர தலைவர் பாக்கர்அலி, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டார தலைவர் தாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் உடன்குடியில் தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். உடன்குடி வட்டார காங்கிரஸ் தலைவர் துரைராஜ் ஜோசப் தலைமை தாங்கினார். உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் ஜான்பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.