சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு எதிர்ப்பு: சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டம்

சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2022-07-26 22:58 GMT

அமலாக்கத்துறை விசாரணை

நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதேபோல் சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு தர்ணா போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷம்

ஆர்ப்பாட்டத்தில் சோனியாகாந்தியை அமலாக்கத்துறையினர் விசாரிப்பதை கண்டித்தும், மேலும் அமலாக்கத்துறையினர் சோனியாகாந்தியை விசாரணை நடத்துவதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் திருமுருகன், பாண்டியன், மாநில பொதுச்செயலாளர் சுரேஷ், மாவட்ட பொதுச்செயலாளர் விஜய்ஆனந்த், முன்னாள் மாவட்ட தலைவர் மேகநாதன், அமைப்பு சாரா மாவட்ட தலைவர் வரதராஜ், விவசாய அணி மாவட்ட தலைவர் சிவக்குமார், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, கோவிந்தராஜ், நாகராஜ், நடராஜ், நிஷார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்