காங்கிரசார் பாதயாத்திரை

Update: 2022-08-13 16:38 GMT

 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உத்தமபாளையம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. தேனி மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். உத்தமபாளையம் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் வக்கீல் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். உத்தமபாளையம் தேரடியில் தொடங்கி பாதயாத்திரை கோம்பை வழியாக பண்ணைப்புரம், தேவாரம் வரை சென்று அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து நிறைவடைந்தது. பாதயாத்திரையில், மாவட்ட துணை தலைவர் சன்னாசி மாவட்ட பொருளாளர் அப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்