விழுப்புரம் அருகேகாங்கிரஸ் பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலைபோலீஸ் விசாரணை

விழுப்புரம் அருகே காங்கிரஸ் பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-04-09 18:45 GMT


விழுப்புரம் ரங்கசாமி லே அவுட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவர் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவரது மனைவி சிராஜிகிஷா. 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மவுரிஷ், தேஜஸ்விகா என்று 2 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வந்த மணிகண்டன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது, விபத்தில் சிக்கினார். இதில் அவரது இடது காலில் காயம் ஏற்பட்டு, நடக்க முடியாமல் வீட்டில் இருந்தார்.

தற்கொலை

வேலைக்கு செல்ல முடியாமல் போனதால், மணிகண்டன் மன உளைச்சலில் இருந்தாா். இ்ந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது தாய் ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்