திருச்சி கோர்ட்டு முன்பு காங்கிரஸ் வக்கீல் அணியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி கோர்ட்டு முன்பு காங்கிரஸ் வக்கீல் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-29 20:03 GMT

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு சார்பில் கோர்ட்டு முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், வக்கீலுமான சரவணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராகுல்காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்