நேரு படத்துக்கு காங்கிரசார் மரியாதை

நெல்லையில் நேரு படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2022-11-14 19:58 GMT

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால்நேருவின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சிக்கு தச்சநல்லூர் மண்டல தலைவர் கெங்கராஜ் தலைமை தாங்கினார். கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட நேருவின் உருவ படத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உதயக்குமார், கவிபாண்டி, பரணி இக்கி, வக்கீல் செந்தில்குமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்