தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட காங்கிரஸ் முடிவு

பிரதமர் மோடி தமிழக வருகையை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Update: 2023-04-07 05:47 GMT

சென்ன

தமிழகத்தில் பிரதமர் மோடி செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

மேலும் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை இழக்கச்செய்து, ஜனநாயகத்தை பிரதமர் மோடி சிதைத்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார்.

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில் கறுப்பு கொடி காட்ட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பிரதம்ர் மோடிக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி வருகை காரணமாக நாளை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்