காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-03-29 18:45 GMT

சிவகிரி:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கத்தினை கண்டித்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய பேச்சுரிமையை பாதுகாக்கும் விழிப்புணர்வு வாகன பிரசார பயணம் குறித்து வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம் சிவகிரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், 22 கிராம பஞ்சாயத்துக்கள், 3 பேரூராட்சிகள், நகர காங்கிரஸ் கமிட்டி அமைப்பு, சங்கரன்கோவில் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் கலந்து கொள்வது எனவும், நிகழ்ச்சியினை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திருஞானம், சங்கை கணேசன், புளியங்குடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பால்ராஜ், சிவகிரி பேரூர் கமிட்டி தலைவர் வக்கீல் அமுது, சங்கரன்கோவில் வட்டார தலைவர்கள் பன்னீர்துரை, அய்யாதுரை, வாசுதேவநல்லூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.பி.டி.மகேந்திரன், தொகுதி ஓ.பி.சி. தலைவர் எஸ்.காந்தி, நகர ஓ.பி.சி. தலைவர் எஸ்.மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்