காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

Update: 2023-04-04 20:59 GMT

குழித்துறை:

ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து குழித்துறை ரெயில் நிலையம் முன்பு நேற்று மாலையில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். நல்லூர் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் நிர்மல் ராவன்டிஸ் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் பேரூராட்சி தலைவர்கள் பமலா, சுரேஷ், மேல்புறம் வட்டார காங்கிரஸ் தலைவர் ரவிசங்கர் உள்பட காங்கிரசார் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்