இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரசும், பா.ஜனதாவும் ஒரே நிலைப்பாட்டை கொண்டவை- தொல்.திருமாவளவன்

இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரசும், பா.ஜனதாவும் ஒரே நிலைப்பாட்டை கொண்டவை என்று மேலூரில் தொல்.திருமாவளவன் பேசினார்

Update: 2022-11-27 19:45 GMT

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையம் முன்புள்ள காஞ்சிவனம் மந்தை திடலில் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் மாணவர் மாநாடு நடைபெற்றது. மாணவர் கூட்டமைப்பு தலைவர் பாரிவேந்தன் தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.,உலக தமிழர் கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

கல்லூரியில் படிக்கும் மாணவராக நான் இருந்தபோது இலங்கையில் நடைபெற்ற இன படுகொலை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தி அரசியலில் பொது வாழ்க்கை தொடங்கினேன். ஈழ தமிழர்களுக்கு பாதுகாவலராக விடுதலைப்புலிகள் இருந்தனர். பிரபாகரனின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவருடன் கலந்து கொண்டேன். இலங்கை மக்கள் மீது எந்தவித அச்சுறுத்தலையும் செய்யாதவர்கள் விடுதலைப்புலிகள். இலங்கை தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க.வும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளன. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை ஆனவர்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்