வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
இலுப்பூரில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இலுப்பூர் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் இலுப்பூர் தனியார் கல்லூரியில் நடந்தது. இப்போட்டியில் 45 பள்ளிகளை சேர்ந்த 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து 150 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாணவி வேம்பரசி 800, 400, 200 மீட்டர் ஓட்டத்திலும் மற்றும் ரசிகா 800, 400, 200 ஓட்டத்தில் முதலிடமும், தட்டு எறிதல் போட்டியில் திருப்பதி முதலிடமும், குண்டு எறிதல் போட்டியில் கணேசன் முதலிடமும், தட்டு எறிதல் போட்டியில் சுபா முதலிடமும், உயரம் தாண்டுதலில் சஞ்சய் 2-ம் இடமும். குண்டு, தட்டு எறிதலில் மகேஸ்வரி 2-ம் இடமும், குண்டு எறிதலில் சுபா 3-ம் இடமும் பிடித்து பல்வேறு பரிசுகளை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியை ஆகியோரை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.