தங்கம் வென்ற கல்லூரி மாணவிக்கு பாராட்டு விழா

தங்கம் வென்ற கல்லூரி மாணவிக்கு பாராட்டு விழா

Update: 2022-06-23 19:56 GMT

மெலட்டூர்:

அம்மாப்பேட்டை ஒன்றியம் வடக்குமாங்குடி ஊராட்சி சார்பில் தேசிய அளவிலான ஓட்டப்பந்தய போட்டியில் தங்கம் வென்ற கல்லூரி மாணவி சீதளாதேவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு சோமசுந்தரம் தலைமை தாங்கினார். வடக்குமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜ், ஒன்றிய கவுன்சிலர் செல்வபாரதிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவி சீதளாதேவியை ஊராட்சிமன்ற தலைவர்கள், கிராமமக்கள் சால்வை அணிவித்து பாராட்டினர். பின்னர் மாணவி பேசுகையில், எனது பெற்றோர் அளித்த ஆக்கமும், ஊக்கமும் என்னை தேசிய அளவில் வெற்றி பெற வைத்தது. தமிழக அரசு எனக்கு உதவினால் சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வேன் என்றார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் வெண்ணிலாதர்மராஜ், சத்தியவாணிசீரங்கன், ஒன்றிய கவுன்சிலர் செல்வம், தமிழக இளைஞர் மேம்பாட்டு கழக பயிற்சியாளர் நாகராஜன், வடக்குமாங்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் அப்துல்நாசர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்