தமிழக கோ-கோ அணியினர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வாழ்த்து
தேசிய போட்டியில் பங்கேற்கும் தமிழக கோ-கோ அணியினர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வாழ்த்து பெற்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், 37-வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில், தமிழ்நாடு மாநில ஆண்கள் கோ-கோ அணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதனையடுத்து கோ-கோ அணி வீரர்கள், பெரியகுளத்தில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு வந்தனர். அங்கு வந்த வீரர்களுக்கு, விளையாட்டு சீருடைகள் வழங்கி போட்டியில் வெற்றி பெற ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக கோ-கோ அணி மேலாளர் விமலேஸ்வரன், பயிற்சியாளர் கருணாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.