எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் நேரில் வாழ்த்து
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி அவருக்கு கட்சியினர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி அவருக்கு கட்சியினர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சேலத்தில் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு அ.தி.மு.க.வினர், கூட்டணி கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
மேச்சேரி கிழக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளரும், எம்.காளிப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவருமான ராஜா ஏற்பாட்டின் படி, 69 கிலோ கேக்கினை வெட்டி எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு உபகரணம்
காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. மாணவரணி சார்பில் தீவட்டிப்பட்டியில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சுந்தரராஜன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன், காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியம், நகர செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவரணி செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார்.
சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மணி எம்.எல்.ஏ. கேக் வெட்டி, பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 10 கைப்பந்து அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இதில் மாவட்ட இணை செயலாளர் ஈஸ்வரி, முன்னாள் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சித்தேஸ்வரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராணி, ஒன்றிய பேரவை செயலாளர் வெங்கடேசன், நகர பேரவை செயலாளர் ஆனந்தன், தீவட்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ராமசாமி, வக்கீல் சீனிவாசன், தீவட்டிப்பட்டி கிளை செயலாளர்கள் ரஜாக், பீட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.