காங்கயம் போலீஸ் நிலைய ரவுண்டானா அருகே தபால் அலுவலகம் முன்பு நேற்று நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணை தலைவர் பண்டுபாய் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் கே.ஏ.சிபகத்துல்லா முன்னிலை வகித்தார்.
இதில் முகாந்தரம் இல்லாத குற்றச்சாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்ததை கண்டித்து கொடிகளை பிடித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மணி, முன்னாள் அவுட்ரீச் பிரிவு மாநில தலைவர் சேக் சாதுல்லா உள்பட மாவட்ட, நகர, வட்டார, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.